கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு நடிகர் விஜயும் ஒரு காரணம் என்றும், வழக்கு வந்துவிடுமோ என்ற பயத்தில் அவர் 72 நாட்களுக்கும் மேலாக பனையூர் வீட்டில் பதுங்கியிருந்ததாகவும் அ.தி.மு.க கடுமையாக விமர்சித்துள்ளது.

விஜய்யின் கட்சி அலுவலகம் 15 நாட்கள் மூடப்பட்டிருந்ததே அவருடைய ‘வீரத்திற்கு’ சான்று என்று கேலி செய்துள்ள அ.தி.மு.க., அவர் மனப்பாடம் செய்து பேசும் அரசியல் கருத்துக்கள் அனைத்தும் வெறும் குப்பை என்றும், பயனற்றவை என்றும் சாடியுள்ளது.

உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் சொல்லாத விஜய், அவர்களைத் தனது இடத்திற்கே வரவழைத்து ‘பண்ணையார்’ தனம் செய்ததாக அ.தி.மு.க ஐடி விங் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.