தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் மற்றும் அதிமுக இடையே கூட்டணி உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது.

அண்மையில் அதிமுக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில் விஜய்யை கடுமையாக விமர்சித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில், துக்க நிகழ்வுகளில் உயிரிழந்தவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறாமல், பாதிக்கப்பட்டவர்களை தனது பனையூர் இல்லத்திற்கு வரவழைத்து விஜய் சந்திப்பதை “பண்ணையார்தனம்” என அதிமுகவினர் சாடியுள்ளனர்.

இதற்காக அவருக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாம் என கிண்டல் செய்துள்ள அதிமுகவினர், கூட்டணி அமையாத விரக்தியில் விஜய்யை தொடர்ந்து சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.