அதிமுக ஐடி விங்கின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் அவரது தமிழக வெற்றிக் கழகத்தை விமர்சித்து ஒரு காட்டமான பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசுப் பணத்தைக் கையாடல் செய்வது மட்டுமல்ல, சட்டவிரோதமாகப் பணம் சம்பாதிப்பதும் ஊழல்தான் என ஊழலுக்குப் புதிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சட்டத்திற்குப் புறம்பாகத் தொடர்ந்து பிளாக்கில் டிக்கெட் விற்று, அதன் மூலம் பல கோடிகள் சம்பாதிக்கும் நடிகர் விஜய் தான் “ஆகப்பெரும் ஊழல்வாதி” என்று அந்தப் பதிவில் நேரடியாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பனையூர் பண்ணையார் அவர்களே,
ஊழல் என்பது சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் செயல். அப்படிப் பார்த்தால், சட்டத்திற்கு விரோதமாக, தொடர்ந்து ப்ளாக்கில் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய் @actorvijay ஆகிய நீங்கள் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி.
‘மத்திய அரசிற்கு அடிமை’…
— AIADMK IT WING – SayYesToWomenSafety&AIADMK (@AIADMKITWINGOFL) January 25, 2026
தவெக ஊழலுக்கு எதிராகப் பேசி வரும் சூழலில், அதிமுகவின் இந்த நேரடித் தாக்குதல் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தவெக ஆதரவாளர்கள் இதற்குச் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதிமுக – தவெக இடையே தற்போது ஒரு டிஜிட்டல் போரே வெடித்துள்ளது.
