இராணுவப் படை வீரர் ஒருவர் தனது முதல் மாத ஊதியம் முழுவதையும் கோவிலுக்குக் காணிக்கையாக வழங்கிய நெகிழ்ச்சியான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கரில் உள்ள புகழ்பெற்ற சாவ்லியா சேத் கோவிலுக்குத் தனது குடும்பத்தினருடன் சீருடையில் வந்த அந்த வீரர், அங்கிருந்த காணிக்கைப் பெட்டியில் தனது முதல் சம்பளப் பணத்தை ஒவ்வொன்றாக எண்ணி மகிழ்ச்சியுடன் சமர்ப்பித்தார்.
இந்தச் செயலை அங்கிருந்தவர்கள் காணொளியாகப் பதிவு செய்து இணையத்தில் பகிர, அது தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தரப்பினர் அந்த வீரரின் பக்தியையும் தியாகத்தையும் பாராட்டி வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் இந்தத் தொகையைத் தனது பெற்றோருக்கோ அல்லது ஏழை எளியோரின் பசிக்கோ வழங்கியிருக்கலாம் என மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், தனது வாழ்நாள் லட்சியமான பணி கிடைத்த மகிழ்ச்சியில் அவர் செய்துள்ள இந்த நேர்த்திக்கடன் இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
