சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்றும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,16,960 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,620 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம்‌ 15,949 ரூபாய்க்கும், ஒரு சவரன்‌ 1,27,592 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு பத்து ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 355 க்கும் ஒரு கிலோ வெள்ளி 3,55,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.