உலக சுகாதார அமைப்பிலிருந்து (WHO) அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்த அமைப்பு சீனாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டிய டொனால்ட் டிரம்ப், கடந்த ஆண்டே இதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார்.
பெருந்தொற்றை கையாண்ட விதம் தவறானது என்றும், தன்னைத்தானே சீர்திருத்திக்கொள்ளும் திறன் அந்த அமைப்பிற்கு இல்லை என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவை உலக சுகாதார அமைப்பு மறுத்துள்ளதோடு, இது உலகிற்கே ஒரு பெரிய இழப்பு என்றும் கவலை தெரிவித்துள்ளது.
பாரம்பரியமாக உலக சுகாதார அமைப்பிற்கு அதிக நிதி வழங்கும் நாடாக அமெரிக்கா இருந்து வந்தது. ஆனால், 2024 மற்றும் 2025-ம் ஆண்டுகளுக்கான கட்டணத்தை அமெரிக்கா செலுத்தாததால், அந்த அமைப்பில் தற்போது நிதி நெருக்கடி ஏற்பட்டு வேலை இழப்புகளும் தொடங்கியுள்ளன.
நிலுவைத் தொகையை அமெரிக்கா கட்டாயம் செலுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் வழக்கறிஞர்கள் கூறினாலும், அதைச் செலுத்த வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்று அமெரிக்கா பிடிவாதமாகத் தெரிவித்துள்ளது.
