மலை உச்சிக்கு வேட்டையாடச் சென்ற சிங்கத்தை மலை ஆடு ஒன்று பின்னால் இருந்து முட்டி பள்ளத்தில் தள்ளும் பரபரப்பான காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மலைப் பாங்கான பகுதியில் நின்றுகொண்டிருக்கும் சிங்கம் சற்றும் எதிர்பாராத வேளையில், பின்னால் இருந்து ஓடி வரும் ஆடு அதனைத் தள்ளிவிடும் அந்தத் துயரமான காட்சியில், சிங்கம் பள்ளத்தில் உருண்டு பாறைகளில் மோதி உயிரிழப்பது போல் காட்டப்பட்டுள்ளது.
View this post on Instagram
இருப்பினும், இந்தக் காணொளி முற்றிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைப் பதிவு என்பது குறிப்பிடத்தக்கது. இயற்கையில் சிங்கத்திற்கும் மலை ஆட்டிற்கும் இடையே இத்தகைய மோதல் நடைபெறுவது மிகவும் அரிதான ஒன்று என்றாலும், ஏஐ தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியால் நிஜமான சம்பவங்களைப் போலவே உருவாக்கப்பட்ட இந்தக் காணொளி இணையவாசிகள் மத்தியில் வியப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
