செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று (ஜனவரி 23) பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் களைகட்டி வருகிறது. இந்தக் கூட்டத்தில் பேசிய மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “தமிழகத்தை மீட்க நர்மதையின் மைந்தன் மோடி இங்கே வந்துள்ளார்” என்று ஆவேசமாக முழங்கினார். மதுராந்தகத்தில் கூடியுள்ள இந்த மக்கள் கூட்டத்தைப் பார்க்கும் போதே, அது சட்டப்பேரவையில் உள்ளவர்களுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக அவர் சாடினார்.
பேச்சைத் தொடர்ந்த நயினார் நாகேந்திரன், தமிழக ஆளுங்கட்சியை நேரடியாகத் தாக்கும் வகையில் ஒரு கருத்தைச் சொன்னார். “தற்போது இங்கே சூரியன் தென்படவில்லை, பிரதமர் மோடி வந்தவுடன் சூரியன் மறைந்துவிட்டது” என்று அவர் கூறியது தொண்டர்களிடையே பலத்த கரகோஷத்தை ஏற்படுத்தியது. பிரதமரின் வருகையும், நயினாரின் இந்த அதிரடிப் பேச்சும் வரப்போகும் தேர்தலுக்கான மிகப்பெரிய அரசியல் அஸ்திவாரமாகவே பார்க்கப்படுகிறது
