தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மர்ம நபர்கள் உணவில் விஷம் வைத்துக் கொடுத்ததில் 15 குரங்குகள் பரிதாபமாக உயிரிழந்தன. இந்தச் சம்பவத்தில் மேலும் 80 குரங்குகள் மயக்கமடைந்து உயிருக்கு போராடிய நிலையில், அவற்றைப் பார்த்த உள்ளூர் மக்கள் உடனடியாக கால்நடை மருத்துவருக்குத் தகவல் அளித்தனர்.

மர்ம நபர்கள் குரங்குகளைத் திட்டமிட்டு இந்தப் பகுதிக்குக் கொண்டு வந்து விஷம் வைத்துக் கொன்றதாகக் கூறப்படும் நிலையில், தற்போது பாதிக்கப்பட்ட குரங்குகளுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்