பெண் குழந்தைகளைப் பாரமாக நினைக்கும் சமூகங்களுக்கு மத்தியில், தனது மூன்று மகள்களைத் தனது மிகப்பெரிய பலமாகவும், கௌரவமாகவும் கருதும் ஒரு தந்தையின் செயல் இணையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் கராச்சி நகரைச் சேர்ந்த வலாகர் (Vlogger) ஒருவர் சாலையில் சென்றபோது, அவருக்கு முன்னால் சென்ற ஒரு ஆல்டோ காரின் பின்பக்க வாசகத்தைக் கண்டு வியந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by SYED KAZIM🩶 (@syed_kazimkazmi110)

அந்த காரில், “நீங்கள் என்னை மிரட்ட முடியாது. எனக்கு மூன்று மகள்கள் இருக்கிறார்கள்” (You can’t scare me. I have three daughters) என்று கம்பீரமாக எழுதப்பட்டிருந்தது.

அதற்கு கீழே மகள்களின் பெயர்களின் முதல் எழுத்துக்களான M, A, S ஆகியவையும் பொறிக்கப்பட்டிருந்தன. “இந்த நாளில் நான் பார்த்த மிக அழகான விஷயம் இதுதான்” என்று அவர் அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ பகிரப்பட்ட சில நாட்களிலேயே 2 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகியுள்ளது. “மகள்களைப் பெற்ற ஒவ்வொரு பெண்ணும் இது போன்ற ஒரு தந்தையையே கனவு காண்கிறார்கள்”, “இந்த அப்பா தங்கம்” என நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.