திமுக, அதிமுக என பெரிய கட்சிகள் எல்லாம் தேர்தல் களத்தில் பம்பரமாக சுழன்று கொண்டிருக்க, தமிழக வெற்றிக் கழகம் மட்டும் ஏன் இன்னும் அமைதியாக இருக்கிறது என்று பல விமர்சனங்கள் எழுந்தன. இதற்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசியுள்ள செங்கோட்டையன் அவர்கள், ஒரு சுவாரஸ்யமான பிளாஷ்பேக்கை நினைவு கூர்ந்துள்ளார்.

2011 தேர்தலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வெறும் மூன்றே இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தி எப்படி இமாலய வெற்றி பெற்றாரோ, அதேபோல்தான் விஜய்யும் வெற்றி பெறுவார் என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். “அமைதிக்கு பின்னால் ஒரு புயல் இருக்கிறது” என்பது போல விஜய் தரப்பு இருப்பதை இது காட்டுகிறது.