தமிழக சட்டசபையின் 3-ம் நாள் கூட்டத்தொடரில், அதிமுக எம்.எல்.ஏ தங்கமணி எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகக் காட்டமான பதிலடி கொடுத்தார். “அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் மீது டெஸ்மா, எஸ்மா போன்ற கடுமையான சட்டங்கள் பாய்ந்தன; அவர்கள் இரவோடு இரவாகக் கைது செய்யப்பட்டு ஒடுக்கப்பட்டனர்” என்று பழைய சம்பவங்களை நினைவூட்டிச் சாடினார். தற்போதைய திமுக அரசு, போராட்டங்களை வெறும் வேடிக்கை பார்க்காது என்றும், ஜனநாயக முறையில் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
அரசு ஊழியர்களின் மிக முக்கியமான கோரிக்கையான 23 ஆண்டுகால ஓய்வூதிய விவகாரத்தில், திமுக அரசு எடுத்த அதிரடி முடிவால் அவர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாக முதலமைச்சர் பெருமிதத்துடன் கூறினார். “நாங்கள் அரசு ஊழியர்களின் நண்பன்” என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
