இந்தோனேசியாவை தாயகமாகக் கொண்ட அழகான வெளிநாட்டு வகை கிளி ஒன்று தனது உரிமையாளரை அம்மா என்று அழைத்து இந்தி மொழியில் டீ கேட்டுப் பேசும் காணொளி சமூக வலைதளங்களில் பலரது மனதையும் கவர்ந்து வருகிறது.
Parrot Ask for Tea pic.twitter.com/K5CDrLD7eC
— news for you (@newsforyou36351) January 22, 2026
சிவப்பு மற்றும் பச்சை நிற இறக்கைகளைக் கொண்ட அந்தப் பறவை மிகவும் தெளிவாகப் பேசும் நிலையில், அதன் அழைப்பிற்குப் பதிலளிக்கும் அந்தப் பெண்மணி தனது செல்ல மகனுக்காக டீ கொண்டு வருவதாகக் கூறி கொஞ்சும் காட்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன.
மனிதர்களைப் போலவே உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் இந்த அறிவுக்கூர்மை மிக்க பறவையின் காணொளி தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருவதோடு, பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
