தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தங்களது கூட்டணிகளை உறுதி செய்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்துடன் இதுவரை எந்தக் கட்சியும் கூட்டணி அமைக்கவில்லை.

இதுகுறித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ள செங்கோட்டையன், 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக கூட்டணி அமைத்துப் போட்டியிடுமா அல்லது தனித்துப் போட்டியிடுமா என்பது குறித்து விஜய் விரைவில் அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், எத்தனை கூட்டணிகள் அமைந்தாலும் வரும் தேர்தலில் விஜய்தான் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராகப் பதவியேற்பார் என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.