ஆஸ்திரியாவைச் சேர்ந்த வெரோனிகா ( என்ற பசு, கருவிகளைப் பயன்படுத்தும் உலகின் முதல் பசுவாக இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் பசு தன் உடம்பில் அரிப்பு எடுக்கும்போது, கைகளால் எட்ட முடியாத இடங்களைச் சொறிந்து கொள்ள குச்சிகள், துடைப்பங்கள் மற்றும் ரேக்குகளை மிகச் சமர்த்தாகப் பயன்படுத்துகிறது.

வியன்னா கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதைப் பார்த்து வியந்துபோயுள்ளனர். மென்மையான இடங்களுக்கு குச்சியின் கைப்பிடிப் பகுதியையும், மற்ற இடங்களுக்கு அதன் தடித்த முனையையும் மாற்றி மாற்றிப் பயன்படுத்தும் அளவுக்கு இந்தப் பசு அறிவாற்றல் கொண்டிருப்பதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

வெரோனிகாவின் உரிமையாளரான விட்கார் வீகலே, இந்தப் பசு பல ஆண்டுகளுக்கு முன்பே மரக்கட்டைகளுடன் விளையாடத் தொடங்கி, காலப்போக்கில் அவற்றைத் தனக்கு உதவியாகப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டதாகக் கூறுகிறார்.

சமூக வலைதளங்களில் இந்தப் பசுவின் வீடியோக்களைப் பார்த்த ஆயிரக்கணக்கான மக்கள், “இந்தப் பசு நம்மை விட புத்திசாலியாக இருக்கிறதே!” என நகைச்சுவையாகவும் ஆச்சரியமாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

“>

 

விலங்குகளிடமிருந்து பொறுமை மற்றும் அறிவாற்றலைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கு வெரோனிகா ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறாள்.