மகாராஷ்டிர மாநிலம் லாத்தூரில், கணவனுடன் ஏற்பட்ட தகராறில் ஒரு தாய் தனது ஒரு வயது பெண் குழந்தையை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூலித் தொழிலாளியான கணவர் வேலை முடிந்து வீட்டிற்கு தாமதமாக வந்ததால் தம்பதிக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த 30 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண், சமையலறை கத்தியால் தனது குழந்தையை உடல் முழுவதும் பலமுறை குத்தி கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், குழந்தையைக் கொன்ற தாயைக் கைது செய்துள்ளனர்.

இதேபோல் மத்தியப் பிரதேசத்தின் குவாலியரிலும் ஒரு கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. பக்கத்து வீட்டு நபருடன் தவறான உறவில் இருந்த ஜோதி ரத்தோர் என்ற பெண், அதை நேரில் பார்த்த தனது ஐந்து வயது மகனை மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார்.

முதலில் இது விபத்து என கருதப்பட்ட நிலையில், போலீஸ் காவலராக இருக்கும் குழந்தையின் தந்தை ரகசியமாகச் சேகரித்த ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்கள் மூலம் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பெற்ற மகனையே கொன்ற அந்தத் தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.