உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் நீண்டுகொண்டே செல்லும் நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியாகி உலகையே அதிரவைத்துள்ளது. அதில், வெறும் 23 வயதே ஆன உக்ரைன் இளைஞர் ஒருவர், ராணுவத்தின் முன்வரிசைக்கு (Front Lines) அனுப்பப்படுவதை அறிந்து கதறி அழுகிறார். “எனக்குச் சாக விருப்பம் இல்லை” என்று அவர் மழலை மாறாத குரலில் கதறுவது, போரின் கோரத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும், அமைதிக்காகத் தங்கள் பிரார்த்தனைகளை முன்வைத்து வருகின்றனர்.
WARNING ⛔️ HEARTBREAKING 💔 VIDEO 🚨
A 23 year old Ukrainian 🇺🇦being sent to the front lines breaks down in tears saying he “Doesn’t want to die.”@ZelenskyyUa is sending poor Ukrainian kids to die while he and his elites throw lavish parties & buy luxury homes & automobiles. pic.twitter.com/71ivgTMDj1
— Bryce M. Lipscomb (@BryceMLipscomb) January 20, 2026
அதே சமயம், இந்த வீடியோவைச் சுட்டிக்காட்டி உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. நாட்டுக்காக ஏழை வீட்டு இளைஞர்களைச் சாகத் தூண்டும் ஆட்சியாளர்கள், மறுபுறம் தங்களது மேல்தட்டு வர்க்கத்துடன் சொகுசு மாளிகைகளையும், விலை உயர்ந்த கார்களையும் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்வதாகப் புகார்கள் எழுந்துள்ளன. “தலைவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள், ஆனால் இளைஞர்கள் பலிகடா ஆக்கப்படுகிறார்கள்” என்ற கோஷங்கள் இணையதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
