லண்டனில் பெண் உபேர் டிரைவர் ஒருவர் செய்த செயல் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. காரில் பயணித்த ஒரு பெண் பயணியிடம், பயணம் முடிந்ததும் “டிப்ஸ்” (Tip) கேட்டுள்ளார். பொதுவாக லண்டனில் டிப்ஸ் வழங்கும் கலாச்சாரம் கிடையாது என்பதால் அந்தப் பயணி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் டிரைவர், காரின் கதவுகளை லாக் செய்து, பயணியை வெளியே விடாமல் சிறைபிடித்துள்ளார். இந்தச் செயல் அந்தப் பயணியை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
A female Uber driver refused to open the car doors without getting a tip.
She locked the car doors and held the passengers hostage.
There’s no tipping culture in the UK, so the woman passenger was shocked.
Isn’t it wrong to lock someone like this? pic.twitter.com/sx8jfCfYDD
— ︎ ︎venom (@venom1s) January 20, 2026
ஒரு நபரை அவரது அனுமதி இல்லாமல் காரிலோ அல்லது ஒரு இடத்திலோ பூட்டி வைப்பது சட்டப்படி மிகப் பெரிய குற்றமாகும். அந்தப் பயணி தனது கைபேசியில் நடந்தவற்றை வீடியோ எடுத்தபோது, அந்த டிரைவர் தொடர்ந்து டிப்ஸ் கேட்டு மிரட்டுவது பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், “டிப்ஸ் கேட்க உரிமையுண்டு, ஆனால் இப்படிச் சிறைபிடிக்க யாருக்கும் உரிமையில்லை” எனப் பலரும் அந்த டிரைவருக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உபேர் நிறுவனம் அந்த டிரைவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கும் என அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
