சமூக வலைதளங்களில் இப்போது ஒரு வீடியோ காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. ஒரு விடுதியின் (Motel) வெளியே தங்கள் லாரிகளை நிறுத்திவிட்டு, ஒரு கும்பல் நிதானமாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
நீண்ட தூரப் பயணத்திற்கு இடையே எடுக்கப்பட்ட சாதாரண ஓய்வு போலத்தான் அந்த வீடியோ தொடங்குகிறது. யாருமே எந்த ஆபத்தையும் எதிர்பார்க்கவில்லை.
تفریح تو وڑ گئی pic.twitter.com/B8HgOu13yf
— Shakil Bashir (@ShakilSidhu1) January 19, 2026
ஆனால், பின்னணியில் சாலையில் அதிவேகமாக வந்த ஒரு லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து, இவர்கள் அமர்ந்திருக்கும் இடத்தை நோக்கிச் சீறிப் பாய்ந்து வந்தது.
ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்பதைச் சில நொடிகள் முன்பே உணர்ந்த சிலர், மற்றவர்களை எச்சரித்துவிட்டு மின்னல் வேகத்தில் ஓடினர். அடுத்த 5 வினாடிகளில், அந்த ராட்சத லாரி அவர்கள் அமர்ந்திருந்த இடத்தைக் கடந்து சென்றது.
மயிரிழையில் அனைவரும் உயிர் தப்பினர். ஒரு நொடி தாமதித்திருந்தாலும் பெரிய அசம்பாவிதம் நடந்திருக்கும். “இது ஒரு மிராக்கிள் (Miracle)” என இந்த வீடியோவைப் பார்த்து நெட்டிசன்கள் மிரண்டு போய் கமெண்ட் செய்து வருகின்றனர்.
