மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் தான் இருக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சி. புற்றுநோய் பாதிப்பால் கீமோதெரபி சிகிச்சை எடுத்துக்கொண்ட ஒரு பள்ளி மாணவிக்கு, சிகிச்சை காரணமாகத் தலைமுடி முழுவதும் கொட்டியுள்ளது.
இதனால் மனமுடைந்த அந்தச் சிறுமி, மற்றவர்களிடம் இருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.
View this post on Instagram
தங்கள் தோழி படும் துயரத்தைக் கண்ட சக மாணவிகளும், ஆசிரியைகளும் ஒரு அதிரடி முடிவை எடுத்தனர். அந்த மாணவி மட்டும் தனியாகத் தெரியக்கூடாது என்பதற்காக, பள்ளியில் உள்ள அனைத்து மாணவிகளும் மற்றும் பெண் ஆசிரியர்களும் தங்களது தலைமுடியை முழுவதுமாக மொட்டை அடித்துக் கொண்டனர்.
அந்தச் சிறுமி பள்ளிக்கு வந்தபோது, அங்கிருந்த அனைவருமே தன்னைப்போலவே மொட்டைத் தலையுடன் இருப்பதைக் கண்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனார்.
“நாங்கள் உன்னோடு இருக்கிறோம்” என அவர்கள் காட்டிய இந்த அன்பு, அந்தச் சிறுமியின் முகத்தில் மீண்டும் புன்னகையை வரவழைத்துள்ளது. இந்த நெகிழ்ச்சியான வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் பலரது கண்களையும் கசிய வைத்து வருகிறது.
