சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியான ஒரு வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கார்ப்பரேட் அலுவலகத்தில், ஊழியர் ஒருவர் தனது மேஜையில் வைத்திருந்த தேநீர் கோப்பையிலிருந்து ஒரு எலி மிக சாதாரணமாக எட்டிப் பார்த்து டீயைக் குடிக்கும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன.
மேலும் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுவதாக நம்பப்படும் நவீன அலுவலகங்களிலேயே இத்தகைய அசுத்தமான சூழல் நிலவுவது பார்ப்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, கார்ப்பரேட் நிறுவனங்களின் தூய்மைப் பராமரிப்பு குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
View this post on Instagram
“>
இந்தச் சம்பவம் அலுவலகங்களில் நிலவும் சுகாதாரமற்ற நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. ஏசி வசதியுடன் கூடிய கண்ணாடிக்கூண்டு அலுவலகங்களில் நாம் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்தாலும், அங்குள்ள ரகசிய இடங்களிலும் ஃபால்ஸ் சீலிங் பகுதிகளிலும் எலிகள் நடமாட்டம் இருப்பது ஊழியர்களின் ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
இந்நிலையில் வெறும் வைரல் வீடியோவாக மட்டும் இதைப் பார்க்காமல், அலுவலக நிர்வாகங்கள் ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வளாகத்தை முறையாகப் பூச்சிக் கட்டுப்பாடு செய்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
