டெல்லி மெட்ரோ ரயில்கள் எப்போதும் ஏதாவது ஒரு சர்ச்சைக்கு பெயர் போனவை. காதலர்களின் சில்மிஷம், ரீல்ஸ் மோகம் எனப் பல செய்திகளைப் பார்த்திருப்போம்.
ஆனால், தற்போது ஒரு நபர் செய்த காரியம் ஒட்டுமொத்த டெல்லிவாசிகளையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. டெல்லி மெட்ரோவின் ‘பிங்க் லைன்’ (Pink Line) பாதையில் உள்ள ஒரு ஸ்டேஷனில், எஸ்கலேட்டர் கண்ணாடி அருகே நபர் ஒருவர் பகிரங்கமாகச் சிறுநீர் கழிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
View this post on Instagram
இந்த வீடியோவைப் பகிர்ந்த மிஸ் பரேலி (கஷிஷ் சிங்), “நாகரீகமே இல்லாத இவர்களுக்கு எப்போதுதான் புத்தி வரும்?” எனச் சாடியுள்ளார். போதையில் இருந்தாரா அல்லது பொது ஒழுக்கம் என்பது இவருக்குக் தெரியுமா? என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சுத்தமாகப் பராமரிக்கப்படும் மெட்ரோ வளாகத்தில் இவ்வளவு அசிங்கமாக நடந்துகொண்ட அந்த நபருக்குக் கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என்றும், இதுபோன்ற செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க டெல்லி மெட்ரோ நிர்வாகம் (DMRC) அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
