பொதுவாக நாய், பூனை போன்ற விலங்குகளைச் செல்லப் பிராணிகளாக வளர்த்து, அவற்றுக்குக் குளிப்பாட்டி அழகு பார்ப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால், இங்கே ஒரு பெண் தான் வளர்க்கும் எலிகளைத் தன் குழந்தையைப் போல் பாவித்து, ஷாம்பு போட்டுத் தேய்த்துக் குளிப்பாட்டும் காணொளி இணையதளங்களில் வெளியாகி பலரையும் சிரிக்க வைத்துள்ளது.
=சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வினோத காணொளியில், ஒரு பெண் தனது வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு, பக்கெட்டில் தண்ணீர் வைத்துக்கொண்டு எலிகளை குளிப்பாட்டுகிறார்.
ஒரு தாய் தனது குழந்தையை எப்படி அக்கறையுடன் குளிப்பாட்டுவாரோ, அதே பாணியில் அந்தப் பெண் ஒரு பெரிய எலியைத் தனது கையில் பிடித்துக் கொள்கிறார். முதலில் அதன் மீது தண்ணீரை ஊற்றி நனைக்கும் அவர், பின்னர் ஒரு பாட்டிலில் இருந்து ஷாம்புவை எடுத்து எலியின் உடல் முழுவதும் தடவித் தேய்க்கிறார்.
View this post on Instagram
ஷாம்பு நுரை எலியின் உடல் முழுவதும் படிந்திருக்க, அந்தப் பெண் விடாப்பிடியாக அதைத் தேய்த்துக் கழுவுகிறார். இடையில் அந்த எலி அவரிடமிருந்து தப்பித்து ஓட முயன்றாலும், விடாமல் அதனைப் பிடித்து அவர் குளிப்பாட்டுகிறார். “இன்று எப்படியாவது இந்த எலிகளைப் பளிச்சென்று மாற்றிவிட வேண்டும்” என்ற முனைப்பில் அவர் செயல்படுவது போல் அந்தத் தமாஷான காட்சிகள் அமைந்துள்ளன.
இன்ஸ்டாகிராம் பகிரப்பட்டுள்ள இந்தக் காணொளி, பதிவேற்றப்பட்ட சில நாட்களிலேயே ஆயிரக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு, லைக்குகளைக் குவித்து வருகிறது. இதைப் பார்த்த இணையதள வாசிகள், “இது என்னடா எலிக்கு வந்த சோதனை!” என்றும், “இப்படியொரு அக்கறையான எலி வளர்ப்பாளரை நாங்கள் பார்த்ததே இல்லை” என்றும் நகைச்சுவையாகக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
