கடந்த மூன்று தலைமுறைகளாகத் தாய்மொழியை எழுதவோ, படிக்கவோ தெரியாத ஒரு சமூகத்தை நாம் உருவாக்கிவிட்டோம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேதனை தெரிவித்துள்ளார். தமிழ் மொழியைப் படிக்காமலேயே உயர்ந்த பட்டங்களைப் பெற்று வேலைக்குச் சென்றுவிடலாம் என்ற மோசமான சூழல் இன்று நிலவி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தால் ஆட்சிக்கு வந்த திமுக, இப்போது அந்த எதிர்ப்பில் உறுதியாக இல்லை என்றும் அவர் விமர்சித்தார். “பராசக்தி” திரைப்படத்தில் வரும் புரட்சிகரமான ‘செழியன்’ கதாபாத்திரம் நான்தான் என்று குறிப்பிட்ட அவர், மொழிப்பற்றின் அவசியத்தைப் பற்றி ஆவேசமாகப் பேசினார்.
