அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தனது சொந்தக் கட்சியான அதிமுக மற்றும் அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பயங்கர புயலைக் கிளப்பியுள்ளது. திமுகவை அழிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்ட இயக்கம் தான் அதிமுக, ஆனால் இன்று அது தனது சுயத்தை முழுமையாக இழந்து நிற்கிறது என அவர் மிக ஆவேசமாகப் பேசியுள்ளார்.

சொந்தக் கட்சியின் தற்போதைய செயல்பாடுகள் மீதான தனது கடும் அதிருப்தியை பொதுமேடையிலேயே ஓப்பனாக உடைத்துப் பேசியுள்ள சி.வி.சண்முகத்தின் இந்த அதிரடி பேச்சு, அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ​மேலும் கூட்டணியில் பாமக-வின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய அவர், கடந்த காலங்களில் அதிமுக பெற்ற 47 தொகுதிகளில் 31 தொகுதிகள் பாமக போட்ட பிச்சை என்று மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அன்றைய தேர்தலில் மட்டும் கூட்டணியில் பாமக இல்லாமல் இருந்திருந்தால் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மிகக் கடுமையாகச் சிரமப்பட்டுதான் வெற்றி பெற்றிருப்பார் என்றும் எதார்த்தத்தை போட்டுடைத்துள்ளார். பாமக-வை அரியணையில் ஏற்றி வைத்து, சொந்தக் கட்சியின் பலவீனத்தை முன்னாள் அமைச்சரே இப்படி பகிரங்கமாகப் பேசியிருப்பது, எடப்பாடி பழனிசாமி தரப்பிற்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியதோடு சமூக வலைத்தளங்களிலும் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.