எக்ஸ் தளத்தில் வெளியான வீடியோவில் இந்தியப் பெண்கள் வெளிநாட்டு ஆண்களிடம் மிகவும் சகஜமாகவும், ஆர்வத்துடனும் முன்வந்து பேசுவதைப் பார்க்க முடிகிறது. ஆனால், இதே பெண்கள் நம் நாட்டு ஆண்களை அணுகும் விதம் பெரும்பாலும் வேறாக இருக்கிறது. நம்ம ஊர் பசங்க யாராவது பேச முயற்சி செய்தால், அவர்களை ‘க்ரீப்பி’ (Creepy) அல்லது தொந்தரவு செய்பவர்கள் என்று எளிதில் முத்திரை குத்தி ஒதுக்கிவிடுகிறார்கள். ஒரு சில ஆண்கள் செய்யும் தவறான செயல்களுக்காக, ஒட்டுமொத்த இந்திய ஆண்களையும் அதே கண்ணோட்டத்தில் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம் என்கிற கேள்வி இங்கே வலுவாக எழுகிறது.
Look how these Indian women approached a random white guy and started talking to him.
When I made a post about how they treat Indian men badly, I received so much hate.
My point was – Why do they treat white men so well, while the same women call Indian men creepy?
Maybe 1… pic.twitter.com/uOlC6c6qpu
— ︎ ︎venom (@venom1s) January 18, 2026
இந்திய ஆண்கள் தான் இந்தச் சமூகத்தின் பாதுகாப்பிற்கும், வளர்ச்சிக்கும் அரணாக இருக்கிறார்கள். அப்படி இருந்தும், நம் ஊர் ஆண்களை விட வெளிநாட்டு ஆண்களுக்கு அதிக மரியாதையும், முன்னுரிமையும் கொடுக்கப்படுவது பலருக்கும் வருத்தத்தை அளிக்கிறது. வெளிநாட்டவர்களிடமும் மோசமானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், ஆனால் அவர்களிடம் காட்டப்படும் அந்தத் தாராள மனப்பான்மை நம் சொந்த நாட்டு ஆண்களிடம் ஏன் இல்லை என்பதுதான் இப்போதைய சமூக வலைதள விவாதங்களின் மையக்கருத்தாக உள்ளது.
