தமிழக அரசியல் களம் இப்போது 2026 சட்டசபை தேர்தலை நோக்கி படுவேகமாக நகரத் தொடங்கியுள்ளது. ஒருபுறம் “ஆட்சியில் பங்கு” எனத் தாராளம் காட்டி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கூட்டணிக்கு அழைப்பு விடுத்து வரும் நிலையில், இதுவரை எந்தவொரு கட்சியும் அவருடன் கைகோர்க்க முன்வரவில்லை என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில், அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள புதிய தகவல் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. “தவெக-வுடன் யார் யார் கூட்டணி வைக்கிறார்கள் என்பது வரும் ஜனவரி 23-ஆம் தேதி தெரிந்துவிடும்” என்று அவர் சூசகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில், அதே ஜனவரி 23-ஆம் தேதி தான் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) தனது முழு வடிவத்தைப் பெறவுள்ளது.
அதாவது, பாஜக – அதிமுக இடையிலான தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி அதிகாரப்பூர்வமாக அன்று அறிவிக்கப்பட உள்ளது. இதை மனதில் வைத்தே, விஜய்க்கு யாரும் செல்லவில்லை, அனைவரும் மோடி – எடப்பாடி பக்கமே நிற்கிறார்கள் என்பதைச் சொல்லாமல் சொல்லியுள்ளார் செங்கோட்டையன்.
