சமையல் அறையில் வேலைகளை எளிதாக்கப் பலரும் புதிய யுக்திகளைக் கையாண்டு வரும் நிலையில், நூலில் கோக்கப்பட்ட பூரிகளை ஒரே நேரத்தில் எண்ணெயில் பொரித்தெடுக்கும் வினோதமான வீடியோ இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

பொதுவாகப் பூரிகளை ஒவ்வொன்றாகத் தேய்த்துப் பொரிப்பது அதிக நேரமும் உழைப்பும் எடுக்கும் என்பதால், ரச்சனா என்ற பெண்மணி தான் தேய்த்து வைத்த பூரிகளைத் தனித்தனியாகப் போடாமல் ஒரு நூலில் கோர்த்துப் பின்பு அவற்றை மொத்தமாகச் சூடான எண்ணெயில் விட்டுப் பொரித்தெடுத்தார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Rachana (@rachna_kevat_3355)

நூலைப் பிடித்துக்கொண்டே பூரிகளைத் திருப்பிப் போட்டுத் தயார் செய்த இந்த முறை நேரத்தைச் மிச்சப்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டாலும், இது பாதுகாப்பற்றது என்றும் நூலில் உள்ள சாயம் அல்லது அதன் துகள்கள் உணவில் கலக்க வாய்ப்புள்ளதாகவும் நெட்டிசன்கள் பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.

புதுமையான முயற்சிகள் ஒருபுறம் பாராட்டப்பட்டாலும், சமையலில் பாதுகாப்பிற்கும் தரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதே பலரது கருத்தாக உள்ளது.