அஜ்மீரில் உள்ள மகரிஷி தயானந்த சரஸ்வதி பல்கலைக்கழகத்தில், பேராசிரியர்களுக்குப் பதிலாக மாணவர்களே விடைத்தாள்களைத் திருத்தும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பி.ஏ. முதலாமாண்டு இரண்டாம் செமஸ்டர் வரலாற்றுப் பாடத்திற்கான விடைத்தாள்களை ஒரு ஆணும் பெண்ணும் திருத்துவதும், மற்ற மாணவர்களின் விடைகளைப் படித்து கிண்டல் செய்து சிரிப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. தேர்வு முடிவுகளின் ரகசியம் மற்றும் மதிப்பீட்டு முறையின் நம்பகத்தன்மை குறித்து இந்த சம்பவம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
राजस्थान : अजमेर में महर्षि दयानंद विश्वविद्यालय के बच्चे चेक रहे परीक्षा के पेपर
◆ वीडियो हुआ सोशल मीडिया पर वायरल
◆ विश्वविद्यालय प्रशासन ने शुरू की मामले की जांच#Rajasthan | Rajasthan | #Ajmer | Ajmer pic.twitter.com/1JP7scAfGx
— News24 (@news24tvchannel) January 17, 2026
“>
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. விடைத்தாள்களைத் திருத்துவதற்கு நியமிக்கப்பட்ட பேராசிரியர்களைத் தவிர மற்றவர்களிடம் அவற்றை ஒப்படைப்பது விதிமுறை மீறல் எனத் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ள பல்கலைக்கழகம், தேர்வு முறையின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
