சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமான கோவாவில், ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு ஜோடியின் லிவ்-இன் வாழ்க்கை ரத்தக் கறையோடு முடிவுக்கு வந்துள்ளது. வடக்கு கோவாவின் அரம்போல் பகுதியில் வாடகைக்கு தங்கியிருந்த எலெனா கஸ்தனோவா (37) என்ற பெண், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில், கழுத்தறுக்கப்பட்டு சடலமாகக் கிடந்ததைக் கண்டு வீட்டின் உரிமையாளர் அலறியுள்ளார். உடனே விரைந்து வந்த போலீஸ், அவரது காதலன் அலெக்ஸி லியோனோவை (37) இன்று அதிகாலை 4 மணிக்கு அதிரடியாகக் கைது செய்தது.

​கைது செய்யப்பட்ட அலெக்ஸியிடம் போலீஸ் பாணியில் விசாரித்தபோதுதான், கதையில் இருந்த அந்த நடுக்கம் தரும் ட்விஸ்ட் வெளிவந்தது. எலெனாவைக் கொன்றது மட்டுமல்லாமல், மோர்ஜிம் பகுதியில் எலெனா வானீவா என்ற இன்னொரு பெண்ணையும் தானே கொன்று புதைத்ததாக அவன் கொடுத்த வாக்குமூலம் போலீஸாரையே உறைய வைத்துள்ளது. எதற்காக இந்த இரட்டை கொலை? காதலா? மோதலா? அல்லது வேறு ஏதேனும் மர்மமா எனத் தெரியாமல் போலீஸ் தீவிரமாகத் தோண்டித் துருவி வருகிறது.