அமேசான் காடுகளில் வெளிவுலகத் தொடர்பின்றி வாழ்ந்து வரும் பழங்குடியின மக்கள் குறித்த அரிய வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பிரேசில் மற்றும் பெரு நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் படமாக்கப்பட்ட இந்த வீடியோவில், கைகளில் ஈட்டிகள் மற்றும் வில்-அம்புகளுடன் அந்தப் பழங்குடியினர் காணப்படுகின்றனர்.

மேலும் தொடக்கத்தில் தற்காப்புக்காக ஆயுதங்களை ஏந்தியிருந்த அவர்கள், பின்னர் அங்கு வந்தவர்களிடம் எவ்விதத் தீங்கும் இல்லை என்பதை உணர்ந்து மெல்லத் தங்கள் ஆயுதங்களைக் கீழே இறக்கும் காட்சிகள் வியப்பை ஏற்படுத்துகின்றன.

“>

நவீன நாகரிகத்தின் சாயலே படாத இவர்களின் வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் இன்றும் ஒரு புதிராகவே உள்ளது. வனப்பகுதிகளில் காடழிப்பு மற்றும் சட்டவிரோத சுரங்கப் பணிகள் அதிகரித்து வரும் நிலையில், இத்தகைய பழங்குடியினரின் இருப்பு பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

இதனால் இவர்களது தனித்துவமான வாழ்விடங்களைப் பாதுகாப்பதும், வெளிவுலகத் தொற்றுகள் அவர்களுக்குப் பரவாமல் தடுப்பதும் அவசியம் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த அரிய காணொளி, மனிதகுல வரலாற்றின் ஆதி வேர்களை நமக்கு நினைவூட்டும் ஒரு ஆவணமாகப் பார்க்கப்படுகிறது.