நியூசிலாந்தில் உள்ள 45 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு சொகுசு பங்களாவை இந்திய நபர் ஒருவர் அறிமுகப்படுத்தும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குருகிராமில் உள்ள விலை உயர்ந்த சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளுடன் ஒப்பிட்டுப் பேசிய அவர், இந்தப் பங்களாவின் பிரம்மாண்டத்தையும் அங்குள்ள தூய்மையான சூழலையும் வியந்து பாராட்டினார். “இங்கு மாசு என்பதே சுத்தமாக இல்லை” என்று அவர் குறிப்பிட்டது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தியாவில் குறிப்பாக டெல்லி போன்ற நகரங்களில் காற்று மாசுபாடு பெரும் பிரச்சனையாக உள்ள நிலையில், அவரது இந்த ஒப்பீடு நெட்டிசன்களிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது. அதிநவீன வசதிகள், பரந்த பசுமை வெளி மற்றும் அமைதியான சூழலுடன் அமைந்துள்ள இந்த நியூசிலாந்து இல்லம், குருகிராமின் நெரிசலான மற்றும் மாசுபட்ட வாழ்க்கை முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.
View this post on Instagram
“>
மேலும் 45 கோடி ரூபாய்க்கு இந்தியாவில் கிடைக்கும் வசதிகளை விட, அதே விலையில் நியூசிலாந்தில் உயர்தரமான வாழ்க்கை முறையும், ஆரோக்கியமான சுற்றுச்சூழலும் கிடைப்பதாக அந்த நபர் சுட்டிக்காட்டினார். ஆடம்பரமான வாழ்க்கைக்கு விலை கொடுத்தாலும், தூய்மையான காற்றும் நிம்மதியும் மிக முக்கியம் என்பதை வலியுறுத்தும் வகையில் அவரது கருத்துக்கள் அமைந்துள்ளன.
