சீனாவின் பெருநகரங்களில் நிலவும் இடநெருக்கடி மற்றும் வறுமையின் கோர முகத்தை வெளிப்படுத்தும் வகையில் மிகச்சிறிய தங்கும் விடுதி ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மினி எண்ட் லிவிங் யூனிட்ஸ் என்று அழைக்கப்படும் இந்த அறையின் அகலம் வெறும் 40 சென்டிமீட்டர் மட்டுமே ஆகும்.
View this post on Instagram
ஒரு மனிதன் படுப்பதற்கு கூட போதிய இடமில்லாத இந்த அறையை நெட்டிசன்கள் சவப்பெட்டியுடன் ஒப்பிட்டு விமர்சித்து வருகின்றனர். இவ்வளவு சிறிய இடத்திலும் ஒரு மெல்லிய படுக்கை, மின்சார வசதி மற்றும் ஒரு தொலைக்காட்சி பெட்டி ஆகியவை திணிக்கப்பட்டுள்ளன. இடமின்மை காரணமாக அந்தத் தொலைக்காட்சி பெட்டி நேராகப் பொருத்தப்படாமல் சாய்வாக வைக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு சுமார் 90 ரூபாய் வாடகையில் கிடைக்கும் இந்த அறைகள், நகரத்திற்கு வேலை மற்றும் கல்விக்காக வரும் ஏழை மக்களின் கடைசிப் புகலிடமாக மாறியுள்ளன. சிறைச்சாலையை விட மோசமான நிலையில் உள்ள இந்த அறைகளின் வீடியோ சீனாவில் நிலவும் கடுமையான வீட்டுவசதி நெருக்கடியை உலகிற்குப் பறைசாற்றுகிறது.
