இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கு முன்னதாகத் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்தப் பயிற்சியின் போது ஒரு சுவாரஸ்யமான விஷயம் நடந்துள்ளது. பும்ராவுடன் அவரது குட்டி மகன் அங்கத்தும் மைதானத்திற்கு வந்து ‘டிரெய்னிங்’ கொடுத்துள்ளார்.
பும்ரா வலைப்பயிற்சியில் பந்து வீசுவதற்கு முன்னதாக வார்ம்-அப் செய்தபோது, அவரது மகனும் பின்னாடியே ஓடிவந்து அசத்தினார். பிறகு, பும்ரா பந்து வீசுவதைப் பார்த்த அங்கத், தானும் ஒரு பந்தை எடுத்துச் சென்று ஸ்டம்புகளை நோக்கி வீசிப் பழகினார்.
மகனின் இந்தச் சுட்டித்தனத்தைப் பார்த்து ரசித்த பும்ரா, “பயிற்சியில் என் புதிய பார்ட்னர் எனக்கு உற்சாகம் அளிக்கிறார்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
2026 டி20 உலகக்கோப்பை நெருங்கி வரும் வேளையில், பும்ராவிற்கு ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு, அவர் டி20 தொடரில் மீண்டும் களமிறங்க உள்ளார்.
அப்பா – மகன் இணைந்து கிரிக்கெட் விளையாடும் இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், “அடுத்த பும்ரா தயார்!” என கமெண்டுகளைத் தட்டி வருகின்றனர்.
