தலைப்பொங்கல் என்றாலே மாப்பிள்ளைகளுக்கு மாமனார் வீட்டில் தனி மரியாதைதான்! விதவிதமான உணவுகளால் மாப்பிள்ளையைத் திணறடிப்பது நம்ம ஊர் வழக்கம். அந்த வகையில், ஆந்திர மாநிலம் தெனாலி பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பம் இந்த ஆண்டு ஒட்டுமொத்த இணையதளத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. தனது வீட்டு மாப்பிள்ளைக்கு அன்போடு, தாராளமாக சுமார் 158 வகையான உணவுகளை சமைத்துப் பரிமாறி அசத்தியுள்ளனர். ஆவி பறக்கும் பிரியாணி முதல் நாவூறும் இனிப்புகள் வரை இலையில் இடமே இல்லாத அளவுக்கு விருந்து களைகட்டியுள்ளது.
ஒவ்வொரு குடும்பமும் தங்கள் வீட்டு மாப்பிள்ளையை எப்படி சிறப்பாகக் கவனிக்கலாம் என்று போட்டி போடுவார்கள். ஆனால், இந்த தெனாலி குடும்பம் செய்த காரியம் “டாப் ஆஃப் தி டவுன்” ஆக மாறிவிட்டது. இத்தனை உணவுகளையும் பார்த்து மாப்பிள்ளை மட்டுமில்லை, ஊரே வாயடைத்துப் போயுள்ளது. பொங்கல் பண்டிகையை இவ்வளவு பிரம்மாண்டமான உணவுகளுடன் கொண்டாடிய இந்தத் தம்பதியின் புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. அன்பைச் சொல்ல ஆயிரம் வழிகள் இருந்தாலும், இந்த “உணவுப் பாசம்” தனி ரகம் தான்!
