உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதில் அவர் “தமிழ்ப் புத்தாண்டு” எனக் குறிப்பிட்டுள்ளது தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது. தமிழகத்தில் புத்தாண்டு என்பது சித்திரை மாதமா அல்லது தை மாதமா என்ற விவாதம் நீண்ட காலமாக இருந்து வரும் நிலையில், விஜய் தை மாதத்தையே புத்தாண்டு எனக் குறிப்பிட்டு தனது அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார். இது சமூக வலைதளங்களில் ஆதரவாகவும் எதிராகவும் பல விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளில், உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளின் வாழ்வில் அன்பும் அமைதியும் நிறைந்து, நலமும் வளமும் பெருகட்டும்.
அனைவருக்கும்
வெற்றிப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!— TVK Vijay (@TVKVijayHQ) January 15, 2026
கடந்த சில நாட்களாக அரசியல் நிகழ்வுகள் மற்றும் “ஜனநாயகன்” படம் குறித்த செய்திகளில் மௌனம் காத்து வந்த விஜய், தற்போது இந்தப் பதிவைப் பகிர்ந்துள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரிடமிருந்து வந்திருக்கும் இந்த வாழ்த்துச் செய்தி, ரசிகர்களுக்குப் பொங்கல் பரிசாக அமைந்துள்ளது. ஒரு சாதாரண வாழ்த்துச் செய்தியின் மூலம் தமிழகத்தின் முக்கிய விவாதத்தை மீண்டும் ஆரம்பித்து வைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது
