உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து வெளியாகி இருக்கும் அந்த வீடியோவைப் பார்த்தால் யாருக்கும் ரத்தம் கொதிக்கும். நோயாளிகள் உயிருக்குப் போராடிப் படுத்திருக்கும் வார்டில், குண்டு குண்டாக எலிகள் எந்தப் பயமும் இல்லாமல் அங்குமிங்கும் ஓடி விளையாடுகின்றன. படுக்கையின் மேலேயும் கீழேயும் எலிகள் செய்யும் அலப்பறையைப் பார்த்தால், “இது மனுஷங்களுக்கான வார்டா இல்ல எலிகளுக்கான சரணாலயமா?” எனப் பார்க்கும் எவருக்கும் சந்தேகம் வந்துவிடும். சுகாதாரமாக இருக்க வேண்டிய இடத்தில் இப்படி ஒரு அசுத்தமான சூழலைப் பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது.
यूपी के गोंडा मेडिकल कॉलेज का नजारा देखिए 👇
यहां इंसानों के वॉर्ड में चूहों की मौज जारी है। मोटे-पतले, गोल-मटोल… तरह-तरह के चूहे यहां-वहां फुदक रहे हैं।
जैसे मेडिकल कॉलेज का ये वॉर्ड इंसानों का नहीं- चूहों का है। pic.twitter.com/mmw1gAAjA4
— Congress (@INCIndia) January 14, 2026
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, மக்கள் தங்கள் கோபத்தை அனல் பறக்கப் பதிவிட்டு வருகின்றனர். நோயாளிகளுக்குச் சிகிச்சை கொடுக்கிறார்களோ இல்லையோ, எலிகளுக்கு விருந்து வைக்கிறார்கள் போல எனப் பலரும் கிண்டலாகவும் ஆவேசமாகவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அரசு மருத்துவமனையின் இந்த மெத்தனப் போக்கைப் பார்த்து, “பயங்கரமான நோய்கள் பரவ ஒரு எலி போதாதா? இதுதான் நீங்க கொடுக்கிற பாதுகாப்பா?” என நெட்டிசன்கள் அதிகாரிகளைப் பிரித்து மேய்ந்து வருகின்றனர்.
