இன்றைய இளைஞர்கள் நாளைய தூண்கள் என்பார்கள், ஆனால் தெருவுக்கு தெரு போதையில் இளைஞர்கள் தள்ளாடுவதைப் பார்த்தால் நெஞ்சம் பதறுகிறது. “திராவிட மாடல்” ஆட்சி என்று சொல்லிக்கொள்ளும் வேளையில், இளம் வயதினர் போதை தலைக்கேறி சாலையில் அநாகரிகமாக நடந்துகொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இந்த அவல நிலையைச் சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் ஆதங்கத்தைப் பதிவிட்டு வருகின்றனர்.
திராவிட மாடல் ஆட்சியில் போதை கலச்சாரம்#DmkFailesTN pic.twitter.com/Ycn8KkOh3p
— K.Ashok adv (@ashok777_kalam) January 14, 2026
இந்தக் காணொளியைக் கண்ட பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் கடும் கோபத்தில் உள்ளனர். “படிச்சு முன்னேற வேண்டிய வயசுல, இப்படிப் போதைக்கு அடிமையாகி ரோட்ல விழுந்து கிடக்குறது வேதனையா இருக்கு” எனப் பலரும் பதிவிட்டு வருகின்றனர். அரசின் மெத்தனப் போக்கா அல்லது சமூகத்தின் சீர்கேடா என காரசாரமான விவாதங்கள் ஒருபுறம் நடக்க, “இப்படியே போனா தமிழ்நாட்டின் எதிர்காலம் என்ன ஆகும்?” என்கிற அச்சம் ஒவ்வொரு பெற்றோர் மனதிலும் எழுந்துள்ளது.
