தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது கொள்கை எதிரியான பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி வைக்காது என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் கரூர் விவகாரம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மற்றும் அக்கட்சியின் தலைவர் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். இந்தச் சூழலில், சிபிஐ விசாரணையைப் பயன்படுத்தி விஜய்யைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவும், என்டிஏ கூட்டணியில் இணைக்கவும் பாஜக முயற்சிப்பதாகப் பேசப்பட்டது.
ஆனால், டெல்லி விசாரணைக்குப் பின் சென்னை திரும்பிய நிர்மல் குமார், “பாஜக எங்களின் கொள்கை எதிரி, அவர்களுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை” எனக் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதற்கிடையே, விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பதும், அதற்கு ராகுல் காந்தி மற்றும் ஸ்டாலின் போன்ற தலைவர்கள் குரல் கொடுத்தபோதும் விஜய் மௌனம் காப்பதும் அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
திமுக – காங்கிரஸ் கூட்டணியில் நிலவும் சலசலப்பைப் பயன்படுத்தி, ஒரு வலுவான எதிர்க்கட்சிக் கூட்டணியை உருவாக்க அமித்ஷா திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தவெக தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால், 2026 சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது கூடுதல் பரபரப்பை எட்டியுள்ளது.
