மும்பை வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் உள்ள வாகோலா மேம்பாலத்தில் சட்டவிரோதமாக குதிரை வண்டிப் பந்தயம் நடைபெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், வாகன நெரிசல் மிகுந்த சாலையில் குதிரை வண்டி ஒன்று மிக அதிவேகமாகச் செல்வதையும், அதில் இருந்த இளைஞர்கள் ஆபத்தான முறையில் செயல்படுவதையும் காண முடிகிறது.

ஒரு கட்டத்தில் அந்தக் குதிரை வண்டி மேம்பாலத்தின் தடுப்புச் சுவரைத் தாண்டி எதிர் திசையில் பாய்ந்து அந்தேரி நோக்கிச் சென்றது, அங்கிருந்த வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்தச் சட்டவிரோதச் செயலால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

“>

இது தொடர்பாகப் புகார்கள் எழுந்த நிலையில், மும்பை போக்குவரத்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வாகோலா போக்குவரத்துப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது. பிஸியான நெடுஞ்சாலைகளில் இது போன்ற ஆபத்தான பந்தயங்கள் தொடர்ந்து நடைபெறுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீஸார் உறுதி அளித்துள்ளனர்.