நடிகர் பிரபாஸ் நடிப்பில் மாருதி இயக்கியுள்ள ‘தி ராஜா சாப்’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.

குறிப்பாக, இதில் பிரபாஸின் ஸ்டைலான ‘விண்டேஜ் லுக்’ ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ள நிலையில், படத்திற்கு விமர்சன ரீதியாக கலவையான கருத்துகளே கிடைத்து வருகின்றன.
<a href="http://

“>
ஹாரர்-காமெடி பாணியில் உருவாகியுள்ள இந்தப் படம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபாஸை ஒரு துள்ளலான கதாபாத்திரத்தில் காட்டியுள்ளது.

இந்தச் சூழலில், நடிகை பாயல் ராஜ்புத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ‘தி ராஜா சாப்’ படத்தில் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டு அழுவது போல அவர் நடித்துள்ளார்.

நிஜமாகவே அழுவது போன்ற அவரது தத்ரூபமான நடிப்பு ரசிகர்களைக் குழப்பமடையச் செய்தாலும், இது ஒரு ஜாலியான ரீல் வீடியோதான் என்பது பின்னர் தெரியவந்தது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.