இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகியுள்ள ‘திரௌபதி 2’ படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு வெளியான ‘திரௌபதி’ திரைப்படம் பல்வேறு விவாதங்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்திய போதிலும், வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

அதன் தொடர்ச்சியாக தற்போது உருவாகியுள்ள இரண்டாம் பாகம், ஒரு வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட சரித்திர காலத் திரைப்படமாக வடிவமைக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டாம் பாகத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகத் தொடர, அவருக்கு ஜோடியாக ரக்சனா இந்துசூடன் ‘திரௌபதி தேவி’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

“>

மேலும் தணிக்கை மற்றும் வெளியீட்டுச் சிக்கல்களைத் தாண்டி, இப்படம் வரும் ஜனவரி 15-ம் தேதி பொங்கல் திருநாளை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் டிரெய்லரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் மற்றும் வசனங்கள் படத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளதால், முதல் பாகத்தைப் போலவே இதுவும் ஒரு பேசுபொருளாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.