தமிழகத்தில் பொங்கல் திருநாள் நெருங்கி வரும் வேளையில், பெண்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி காத்திருப்பதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொங்கல் கொண்டாட்டங்கள் முடிவதற்குள் பெண்களுக்கு “இனிப்பான செய்தி” வெளியாகும் என்று சூசகமாகத் தெரிவித்தார்.

தற்போது தமிழக அரசு சார்பில் 1.37 கோடி பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில், அமைச்சரின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மகளிர் உரிமைத்தொகை உயர்த்தப்படுமா அல்லது புதிய சலுகைகள் அறிவிக்கப்படுமா என்ற விவாதங்கள் சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ளன.

இது குறிப்பாக, மகளிர் சுயஉதவி குழுக்களுக்கான கடன் தள்ளுபடி அல்லது புதிய மானியத் திட்டங்கள் குறித்த அறிவிப்பாக இது இருக்கக்கூடும் என்றும் கணிக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையை ஒட்டி குடும்பத் தலைவிகளுக்கு அரசு வழங்கவிருக்கும் இந்த “இனிப்பான செய்தி” என்னவாக இருக்கும் என்பதை அறிய தமிழக பெண்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.