இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, தனது சிறுவயது தோற்றத்தை அப்படியே ஒத்திருக்கும் நிகிதா என்ற சிறுமியை நேரில் சந்தித்துள்ளார். “மினி கோலி” என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இந்த சிறுமியுடன் கோலி இருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றன.
நிகிதாவின் முகம் விராட் கோலியின் சிறுவயது முகத்தோடு மிகவும் ஒத்துப்போவதால், ரசிகர்கள் பலரும் இவரை வியப்புடன் பார்த்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
தற்போது டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடர்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இதுவரை 308 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 14,557 ரன்களைக் குவித்துள்ள அவர், இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் களம் காணத் தயாராகி வருகிறார்.
Young Virat Time-Traveled to Get Autograph from King Kohli 😂❤️ pic.twitter.com/764Ry35MDH
— Kushal Sharma (@KushalSharma_89) January 10, 2026
“>
53 சதங்களுடன் உலகத்தரம் வாய்ந்த பேட்டராகத் திகழும் கோலியின் இந்தச் சந்திப்பு, அவரது ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான ஒரு தருணமாக அமைந்துள்ளது.
