நம் ஊர்ச் சந்தைகளில் சீசன் நேரங்களில் கிலோ 20 அல்லது 30 ரூபாய்க்குத் தாராளமாகக் கிடைக்கும் பாகற்காய், அமெரிக்காவில் தங்கத்தின் விலைக்கு விற்கப்படுவதைக் கண்டு நெட்டிசன்கள் வாயடைத்துப் போயுள்ளனர்.
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர் அங்குள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்குச் சென்று காய்கறிகளின் விலையை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அதில், வெறும் 450 கிராம் (அரை கிலோவிற்கும் குறைவு) பாகற்காயின் விலை இந்திய மதிப்பில் சுமார் ₹270 என அவர் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
அதாவது, அமெரிக்காவில் ஒரு கிலோ பாகற்காய் வாங்க வேண்டும் என்றால் நாம் சுமார் 600 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியிருக்கும்.
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பார்த்த பலரும், “எங்கள் ஊர் ஜார்கண்டில் 20 ரூபாய்க்கு ஒரு கிலோ கிடைக்கும்” என்றும், “இந்தியாவில் 40 ரூபாய்க்கு மேல் விற்றாலே யாரும் வாங்க மாட்டார்கள்” என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
அதே சமயம், அமெரிக்காவில் சம்பளம் டாலரில் இருப்பதால் இந்த விலை அங்குள்ளவர்களுக்குப் பெரிய விஷயமாக இருக்காது என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியாவில் சாதாரணமான ஒரு காய்கறி, வெளிநாட்டில் இவ்வளவு காஸ்ட்லியாக இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
