சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ, விலங்குகளிடம் நாம் எவ்வளவு கனிவாக நடக்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறந்த பாடமாக அமைந்துள்ளது. ஒரு வாலிபர் எவ்வித காரணமுமின்றி சாலையோரம் நின்று கொண்டிருந்த நாயை மிகவும் கொடூரமான முறையில் துன்புறுத்துவதை அந்த வீடியோவில் காண முடிகிறது.

மேலும் தற்காப்புக்காகக் கூட அந்த நாய் எவ்வித எதிர்ப்பும் காட்டாத நிலையில், அந்த நபர் தொடர்ந்து அதைத் தாக்கியது காண்போரின் நெஞ்சைப் பதறவைப்பதாக உள்ளது. ஆனால், “தீவினை செய்தான் தீவினை அறுப்பான்” என்ற பழமொழிக்கேற்ப, அடுத்த சில நொடிகளிலேயே அந்த வாலிபர் செய்த செயலுக்கு இயற்கை உடனடி தண்டனையை வழங்கியது.

“>

இதனால் அந்த நாய் அங்கிருந்து தப்பிக்க முயலும்போது, அந்த வாலிபர் அதைத் துரத்திச் சென்று மீண்டும் உதைக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது கால் தடுமாறி, மிக மோசமான முறையில் கீழே விழுந்தார். இந்த விபத்தில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

எவ்வித தவறும் செய்யாத ஒரு வாயில்லா ஜீவனைத் துன்புறுத்தியவருக்கு கிடைத்த இந்த “இன்ஸ்டன்ட் கர்மா” சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “விலங்குகளுக்கும் உயிர் உண்டு, அவற்றை வதைப்பது மனிதத்தன்மையற்ற செயல்” என்பதை இந்தத் தருணம் அந்த நபருக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத பாடமாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.