ரயிலில் பயணம் செய்தபோது இருக்கையில் கால் வைத்தது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், இளைஞர் ஒருவர் முதியவர் ஒருவரின் காதில் பலமாக குத்திய அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சக பயணிகள் முன்னிலையில் நடந்த இந்த மோதல், ரயிலில் இருந்த மற்றவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மேலும் இருக்கையில் கால் வைப்பது போன்ற சிறிய விஷயம் இவ்வளவு பெரிய வன்முறையாக மாறியது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் போது அங்கிருந்த மற்ற பயணிகள் இளைஞரின் செயலைக் கண்டு திகைத்துப் போயினர்.
View this post on Instagram
“>
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், பொது இடங்களில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதாகவும், சக மனிதர்களிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
