மின்சார வாகனங்களில் (EV) பேட்டரி தீப்பிடித்தால் அதை அணைப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதற்குத் தீர்வாக, சீன ஆராய்ச்சியாளர்கள் ஒரு அதிரடியான ஐடியாவைச் செயல்படுத்திக் காட்டியுள்ளனர். கார் தீப்பிடிக்கப் போவதை சென்சார்கள் கண்டுபிடித்தவுடன், காரின் அடிப்பகுதியில் இருக்கும் ராட்சத பேட்டரியை அப்படியே வெளியே ‘எஜெக்ட்’ (Eject) செய்து தள்ளிவிடும் தொழில்நுட்பத்தை அவர்கள் வீடியோவில் காட்டியுள்ளனர். அந்த வீடியோவில், ஒரு எஸ்யுவி காரில் இருந்து பேட்டரி பல மீட்டர் தூரத்திற்குத் தூக்கி வீசப்படுவதும், பின்னர் பாதுகாப்புப் பணியாளர்கள் அதன் மீது தீயணைப்புப் போர்வையைப் போடுவதும் தெரிகிறது.
China is testing EV's that can EJECT their batteries in emergency situations.
Good idea or overkill? 🤔 pic.twitter.com/HqdMVy2c3N
— HOW THINGS WORK (@HowThingsWork_) January 9, 2026
இருப்பினும், இந்தத் தொழில்நுட்பம் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. காரில் இருப்பவர்களை இது காப்பாற்றினாலும், தூக்கி வீசப்படும் கனமான பேட்டரி சாலையில் செல்லும் மற்ற வாகனங்கள் அல்லது மக்கள் மீது விழுந்தால் என்னாவது என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும், விபத்தின் போது இந்த மெக்கானிசம் சரியாக வேலை செய்யுமா என்பதும் சந்தேகமே. சீனாவில் 2026 ஜூலை முதல் பேட்டரி பாதுகாப்பிற்காகக் கடுமையான விதிகள் வரவுள்ள நிலையில், இந்த ‘பேட்டரி எஜெக்ஷன்’ முறை ஒரு பரிசோதனை முயற்சியாகவே பார்க்கப்படுகிறது தவிர, இது பயன்பாட்டிற்கு வருவது சந்தேகம் தான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
