தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக ஏற்கனவே கூட்டணி அமைத்த நிலையில் தற்போது பாமகவும் கூட்டணியில் இணைந்துள்ளது. இன்று எடப்பாடி பழனிச்சாமியை அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்த நிலையில் கூட்டணியை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார். அதிமுக மற்றும் பாமக கூட்டணி உறுதியாகியுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.
முன்னதாக பாமக மற்றும் பாஜகவுக்கு தலா 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக ஒரு செய்தி வெளியான நிலையில் தற்போது பாமகவுக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நீண்ட இழுபறிக்கு பின்னர் தொகுதி பங்கீடு செய்யப்பட்டதாகவும் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் தொடர்பாக ஒரு பட்டியலை அன்புமணி எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் குறிப்பாக தர்மபுரி, பாப்பிரெட்டிபட்டி மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட தொகுதிகளை பாமக கேட்டதாகவும் கூறப்படுகிறது.
