மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி மிருன்மோய் மஜும்தார் என்பவர், இந்திய இரயில்வேயின் 3-ஆம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டியில் (3AC) பயணம் செய்துள்ளார். தனது இலக்கை வந்தடைந்த பிறகு அவர் ரயிலிலிருந்து இறங்கும்போது, இரயில்வே நிர்வாகம் வழங்கிய போர்வையைத் திரும்ப ஒப்படைக்காமல், அதைத் தனது உடைமைகளுடன் சேர்த்துத் திருடிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. வெறும் 100 ரூபாய் மதிப்பிலான போர்வையைத் திருட முயன்றபோது அவர் பிடிபட்டது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் இச்சம்பவத்திற்காக அவர் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

​ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு நிர்வாகியே இத்தகைய சிறுபிள்ளைத்தனமான திருட்டில் ஈடுபடுவது, நாட்டின் பொருளாதார நிலை குறித்துப் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. “இந்தியப் பொருளாதாரம் நலிவடைந்துவிட்டது” என்று ராகுல் காந்தி முன்னரே குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள், 100 ரூபாய் மதிப்பிலான போர்வையைக்கூட வாங்க முடியாத அளவிற்குத் தான் மக்களின் நிலை இருக்கிறதா என்று சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். ஆளும் கட்சி நிர்வாகியின் இந்தச் செயல், அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் கேலிக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறது.